தேவையான பொருட்கள்:
அரிசி - 1/2 கிலோ
கறிவேப்பிலை - ஒரு கப்
கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு ஸ்பூன்
கடுகு - தாளிக்க
உளுத்தம்பருப்பு - தாளிக்க
முந்திரிப்பருப்பு - 10 கிராம்
நெய் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு
செய்முறை:
சிறிதளவு நெய்யில் கறிவேப்பிலையை வறுத்து பொடி செய்து கொள்ளவும். அரிசியை சாதமாக வடித்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து நெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து.அதனுடன் முந்திரிப் பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
பாத்திரத்தில் உள்ள சாதத்தில் கறிவேப்பிலைத் தூள், வறுத்த முந்திரி மற்றும் கடலைப் பருப்பு, மிளகுத் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறினால் சுவையான ஆரோக்கியம் தரும் கறிவேப்பிலை சாதம் தயார்.