தூக்கலான Taste கொடுக்கும் பஞ்சாபி சன்னா மசாலா செய்வது எப்படி?
வெள்ளை கொண்டைக்கடலை - ஒரு கப்
பச்சை மிளகாய் - 1
மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்
வெங்காயம்- 1 பெரியது
தக்காளி- 2
உப்பு- தேவையான அளவு
நெய்- 4டீஸ்பூன்
கரம் மசாலா தூள்- அரை டீஸ்பூன்
சீரகம்- அரை டீஸ்பூன்
கொத்தமல்லி- மேலே அலங்கரிக்க சிறிதளவு
மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
பூண்டு-5பல்
எண்ணெய்- 2 டீஸ்பூன்
செய்முறை:
கொண்டைக்கடலை இரவு ஊறவைத்து மறுநாள் குக்கரில் மஞ்சள் தூள், உப்பு போடு நான்கு விசில் விட்டு இறக்கவும்.
பின்னர் என்னை காயவைத்து நெய் சேர்த்து, பூண்டு தட்ட போட்டு, வெங்காயத்தை அரைத்து வதக்கவும். அது வதங்கியதும் சீரகம், பச்சை மிளகாய், மிளகாய் தூள், உப்பு போட்டு தக்காளியை அரைத்து சேர்க்கவும்.
பிறகு குக்கரில் வேக வைத்து கலவையை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரம் மசாலா தூள், கொத்தமல்லி தூவி இறக்கவும்.