Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆரோக்கியத்திற்கு தேவையான சகலகலா சக்தி தரும் "புரோட்டீன் அடை" ரெசிபி!

Advertiesment
protein adai
, ஞாயிறு, 17 மார்ச் 2019 (12:11 IST)
உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சக்தியை நாள்முழுவதும் தரும் சுவையான சத்து நிறைந்த புரோட்டீன் அடை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!
 
தேவையான பொருட்கள்:
 
இட்லி அரிசி - 200 கிராம்,
முளைகட்டிய பாசிப்பயிறு, கொண்டைக்கடலை, கொள்ளு, கோதுமை மற்றும் உளுந்து - தலா 100 கிராம்,
காய்ந்த மிளகாய் - 4,
மிளகு - ஒரு டீஸ்பூன்,
தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு,
உப்பு எண்ணெய் - தேவையான அளவு.
 
செய்முறை: 
 
1. இட்லி அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்துக் களைந்து எடுத்துக்கொள்ளவும். 
 
 2. அதனுடன் முளைகட்டிய பயறு வகைகள், காய்ந்த மிளகாய், மிளகு, இஞ்சி சேர்த்து அடைமாவுப் பதத்தில் கரகரப்பாக அரைத்து உப்பு சேர்த்துக் கலக்கவும்.
 
 3.  அடுப்பில் தோசைக் கல்லை வைத்து மாவைப் பரவலாக ஊற்றி       மிதமான தீயில் வேகவிட்டு எடுக்கத்தால் சுவையான புரோட்டீன் அடை தயார்! 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த மாதிரி நீளமா அழகா நகம் வளர்க்கணும்னு ஆசையா? இந்த டிப்ஸை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!