Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முளைகட்டிய காராமணி கிரேவி

முளைகட்டிய காராமணி கிரேவி
தேவையான பொருட்கள்: 
 
வெள்ளை காராமணி முளைகட்டியது - 1 கப் 
வெங்காயம் - 2 
பச்சை மிளகாய் - 2 
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன் 
பூண்டு - 5 
சீரகத் தூள் - கால் ஸ்பூன் 
தனியாத்தூள் - 1/2 ஸ்பூன் 
வேர்க்கடலை - ஒரு கைப்பிடி 
தக்காளி - 1 
தேங்காய் துருவல் - 1 ஸ்பூன் 
பெருங்காயம் தூள் - சிறிதளவு 
 
தாளிக்க: பட்டை, சோம்பு, கிராம்பு.

 
செய்முறை: 
 
வேர்கடலையை ஊறவைத்து தேங்காய் துருவலுடன் அரைத்துகொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தோல் ஊரித்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும். 
 
முளைகட்டிய காராமணியைக் குக்கரில் 2 விசில் வரும் வரை வேகவிடவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டுத் தாளித்து, அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி அதனுடன் தக்காளி, வேகவைத்த காராமணி சேர்த்துக் கொதிக்கவிடவும். 
 
அரைத்த வேர்க்கடலை விழுது, உப்பு, பெருங்காய தூள், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் 5 நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி  தழை தூவி இறக்கவும். இது பூரி, சப்பாத்தி, புல்கா, ரொட்டிக்கு தொட்டு கொள்ள நன்றாக இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆலு பாலக் கட்லெட் செய்வது எவ்வாறு?