Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கழிவறையில் சமையல் செய்யும் அங்கன்வாடி– அமைச்சர் பொறுப்பற்ற பதில் !

Advertiesment
கழிவறையில் சமையல் செய்யும் அங்கன்வாடி– அமைச்சர் பொறுப்பற்ற பதில் !
, வியாழன், 25 ஜூலை 2019 (09:33 IST)
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள கரோரா எனும் பகுதியில் உள்ள அங்கன் வாடி மையத்தில் குழந்தைகளுக்கான உணவை கழிவறையில் வைத்து சமைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் கரோரா எனும் பகுதியில் உள்ள அங்கன் வாடி மையத்தில் சமைப்பதற்கென தனியாக சமையலறை இல்லாததால் உணவை கழிவறையில் வைத்து சமைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் சமையல் செய்யும் பாத்திரங்கள் உள்ளிட்டவைகளையும் கழிவறையிலேயே வைத்து இருக்கும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

இதுகுறித்து பதிலளித்துள்ள அம்மாநில அமைச்சர் இமார்த்தி தேவி, ’கழிவறைக்கும் சமைக்கும் பகுதிக்கும் இடையே தடுப்பு போடப்பட்டு, அங்குதான் சமைக்கப்படுகிறது. நமது வீடுகளில் குளியலறையுடன் சேர்த்து கழிவறையும் உள்ளவாறு அமைக்கப்படுகிறதே. பயன்படுத்தாத பாத்திரங்களை நாம் குளியலறையில் வைப்பது இல்லையா ?.’ என அலட்சியமாகக் கூறியுள்ளார். சம்மந்தப்பட்ட அங்கன் வாடி மையத்தின் அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குழந்தைகள் நலத்துறை தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தானில் இன்னும் 40,000 பயங்கரவாதிகள் –ஒத்துக்கொண்ட இம்ரான் கான் !