Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆரோக்கியம் நிறைந்த சுவையான கறிவேப்பில்லை சட்னி செய்ய !!

Curry leaves chutney
, வியாழன், 26 மே 2022 (17:06 IST)
தேவையான பொருட்கள்:

கறிவேப்பிலை - 1 கைப்பிடி அளவு
கொத்த மல்லித் தழை - 1/2 கைப்பிடி
தேங்காய் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
பூண்டு பல் - 3
பொட்டுக்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
நெல்லிக்காய் அளவு  - புளி
உப்பு - தேவையான அளவு



செய்முறை:

மிக்ஸியில் ஜாரில் கறிவேப்பிலை, கொத்த மல்லித் தழை, தேங்காய் துருவல், பச்சை மிளகாய், தோல் உரித்த பூண்டு பல், பொட்டுக்கடலை, நெல்லிக்காய் அளவு புளி, தேவையான அளவு உப்பு, இந்த பொருட்களை போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு இந்த சட்னியை நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக, அரைத்த இந்த சட்னியை ஒரு கிண்ணத்தில் மாற்றி கொஞ்சம் கட்டியாக கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான் சுவையான கறிவேப்பில்லை சட்னி தயார்.

இப்படியே இந்த சட்னியை தாளிக்காமல் கூட சாப்பிடலாம். தேவைப்பட்டால் 2 ஸ்பூன் நல்லெண்ணெயில், கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம், வரமிளகாய், போட்டு தாளித்து சட்னியில் போட்டு கலந்து சாப்பிடலாம்.

குறிப்பு: கொஞ்சம் இளசாக இருக்கக்கூடிய கறிவேப்பிலையை சட்னிக்கு பயன்படுத்த வேண்டும். ரொம்பவும் முற்றிய கருவேப்பிலையை சட்னி அரைக்க பயன்படுத்தினால் சட்னியில் கருவேப்பிலையின் வாசனை அதிகமாக வீசும். சுவையில் வித்தியாசம் தெரியும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அன்றாட உணவில் பச்சைப்பயறை சேர்த்துக்கொள்வதால் என்ன நன்மைகள் !!