Publish Date: Mon, 28 Mar 2022 (16:25 IST)
Updated Date: Mon, 28 Mar 2022 (16:31 IST)
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
தயிர் - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு சுத்தமான பவுலில் கோதுமை மாவு, அரிசி மாவு, உப்பு போட்டு நன்றாக கலக்கவும்.
பின்னர் அதனுடன் தயிர், பெரிய வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும். மாவு கட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் தெளித்து போண்டா மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.
இந்த மாவை 1 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவினை சிறிய சிறிய உருண்டையாக எடுத்து போடவும். போண்டா ஒருபுறம் நன்றாக வெந்து சிவந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு பொரித்து எடுக்கவும். இப்போது சூப்பரான கோதுமை வெங்காய போண்டா தயார்.