Publish Date: Mon, 07 Mar 2022 (14:48 IST)
Updated Date: Mon, 07 Mar 2022 (14:57 IST)
தேவையான பொருட்கள்:
காளான் - 250 கிராம்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1
ஏலக்காய் - 3
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/ 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மல்லி தூள் -1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
கருவேப்பிலை - சிறிதளவு
தக்காளி - 1
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பட்டை, ஏலக்காய் மற்றும் சீரம் சேர்க்கவேண்டும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தினை அதனுடன் சேர்த்து அதனுடன் உப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பிறகு வெங்காயம் வதங்கியதும் நாம் வைத்துள்ள எல்லா மசாலாவினையும் இதனுடன் சேர்க்கலாம். மசாலா அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி பிறகு அதில் தக்காளி சேர்த்து அதனுடன் பச்சைமிளகாய் மற்றும் கருவேப்பிலை போட்டு மீண்டும் நன்றாக வதக்கவும்.
பிறகு அதில் காளான் சேர்த்து நன்றாக வேகவிடவும். காளான் பாதி வந்த நிலையில் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வரை வேக வைக்கவேண்டும். 10 நிமிடம் கழித்து கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான மஸ்ரூம் மசாலா தயார்.