Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுவையான கத்திரிக்காய் கூட்டு செய்ய...!!

Advertiesment
கத்திரிக்காய் தேங்காய் கூட்டு
சமைக்க தேவையானவை:
 
கத்திரிக்காய் - கால்கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 12 பல்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மஞ்சள்தூள், மிளகாய்த் தூள் - தலா கால் தேக்கரண்டி
வெந்தயத் தூள், கடுகு - தலா கால் தேக்கரண்டி
கடலைபருப்பு, உளுந்து - தலா கால் தேக்கரண்டி
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
பெருங்காயம் 2 சிட்டிகை
தக்காளி - 2
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
தேங்காய் - அரைமுடி
உப்பு - தேவையான அளவு
தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி

செய்முறை: 
 
முதலில் தேங்காயை நறிக்கி வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ள வேண்டும். பின்பு இரண்டு தேக்கரண்டி அளவுக்குத் தேங்காயைத் தனியே எடுத்து அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.
 
பிறகு சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்து தக்காளியையும் நறுக்கிக் கொள்ளவும். பின்னர் கத்திரிக்காயை நீளவாக்கில் வெட்டிக்  கொள்ளவும்.
 
புளியைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைபருப்பு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு போட்டு வதங்கியதும் பெருங்காயம், வெந்தயத்தூள், மஞ்சள் தூள், தக்காளி போட்டு வதக்கி, பின்பு வறுத்த  தேங்காயைச் சேர்த்து வதக்கவும்.
 
இதில் தனியாத் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். அதில் புளிக் கரைசல் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்.அடுத்து அரைத்த தேங்காய்ப் பாலை ஊற்றி குறைந்த தணலில் நன்றாக கொதிக்க விடவும். சுவையான கத்திரிக்காய் தேங்காய் கூட்டு தயார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வளர்ச்சி இடைவெளியை குறைக்க வேண்டும்! – பஞ்சாயத்து தலைவர்களோடு பிரதமர் ஆலோசனை!