Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான இட்லி சாம்பார் செய்ய...!

Webdunia
தேவையான பொருள்கள்:
 
பாசிப்பருப்பு - 50 கிராம்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
மிளகுத் தூள் -  1/2 தேக்கரண்டி
சீரகத் தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
வெந்தயத் தூள் - 1 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிது
 
தாளிக்க:
 
நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பில்லை - சிறிது
செய்முறை:
 
ஒரு பாத்திரத்தில் பாசிப் பருப்பு மற்றும் அது மூழ்கும் அளவு தண்ணிர், பெருங்காயத் தூள் சேர்த்து 15 நிமிடங்கள் வேகவைத்து தனியாக  எடுத்து வைக்கவும். பின் ஒரு வாணலியில் 3 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு  வெடித்தவுடன் கறிவேப்பில்லை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின் பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு சுருள வதக்கவும். பின்னர் 1 1/2 கப் தண்ணிர் சேர்த்து மிளகுத் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், வெந்தயத் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். கடைசியாக வெந்த பருப்பை போட வேண்டும் .கொதித்து 2  நிமிடம் ஆனதும் மல்லித்தழையைப் போட்டு இறக்கி விடவும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்வதேச மீள் உருவாக்க மருத்துவம்! ரீஜென் 2025 மாநாடு! - பிளாஸ்மா சிகிச்சைக்கு வழிகாட்டுதல்கள்!

தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்ய வேண்டியது என்ன? செய்ய கூடாதது என்ன?

ABC ஜூஸின் முக்கிய நன்மைகள். தினமும் அருந்துவதால் கிடைக்கும் முக்கியப் பயன்கள்

கூந்தல் பராமரிப்பு: நெல்லிக்காய் - முடி பலத்திற்கும் அடர்த்திக்கும்!

தினசரி ஓட்டம்: உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான அற்புத மருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments