Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான தேங்காய் போளி செய்ய...!!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
மைதா அல்லது கோதுமை மாவு - 2 கப்
தேங்காய்த்துருவல் - 1 கப்
நெய் - சுவைக்கு
நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன் வரை
வெல்லம் பொடித்தது - 1 கப்
சுக்குப்பொடி - 1/2 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:
 
முதலில் கோதுமை அல்லது மைதா மாவுடன், உப்பு, மஞ்சள் தூள், நெய் சேர்த்து, சிறிது சிறிதாக நீரைச் சேர்த்து, சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து அதன் மேல் சிறிது நல்லெண்ணெயைத் தடவி, குறைந்தது அரை மணி நேரம் மூடி வைக்கவும்.
 
வெல்லத்தில் கால் கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விட்டு, வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய வெல்லப்பாகை மீண்டும் அடுப்பிலேற்றி கொதிக்க விட்டு அத்துடன் தேங்காய்த்துருவலைச் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி விடவும். பிறகு அத்துடன் சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக்  கிளறி, இறக்கி வைத்து ஆற விடவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடாக்கவும்.
 
வாழை இலையில் அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் சிறிது நெய் தடவி தடவி, அதில் எலுமிச்சை அளவு மாவை வைத்து பூரி வடிவில் தட்டி, அதன் மேல் எலுமிச்சம்  பழ அளவு தேங்காய் பூரணத்தை வைத்து மூடி, மறுபடியும் பிளாஸ்டிக் ஷீட்டில் சிறிது நெய் தடவி மாவை வைத்து விரல்களால் சப்பாத்தி போல் தட்டி,  தோசைக்கல்லில் போட்டு, அதை சுற்றி சிறிது நெய்யை ஊற்றி, இரு புறமும் சிவக்க சுட்டெடுக்கவும். சுவையான தேங்காய் போளி தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாத பெண்களுக்கு சில எளிய வழிமுறைகள்..!

மூக்கு கண்ணாடியை தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்..!

தாடி வளர்ப்பவர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய சுகாதார குறிப்புகள்..!

மாம்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments