தேவையான பொருட்கள்: 
	 
	காலிஃப்ளவர் - ஒன்று
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	வெங்காயம் - 4
	பூண்டு - 8 பல்
	முந்திரிப்பருப்பு - 10
 
									
										
			        							
								
																	
	காய்ந்த மிளகாய் - 8
	உப்பு - தேவையான அளவு
 
									
											
									
			        							
								
																	
	லவங்கம் - 2
	பட்டை - 2 சிறு துண்டுகள்
 
									
					
			        							
								
																	
	சீரகம் - ஒன்றரை டீஸ்பூன்
	தனியா - ஒரு டீஸ்பூன்
 
									
					
			        							
								
																	
	தேங்காய் துருவல் - ஒரு கப்
	மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
 
									
					
			        							
								
																	
	கசகசா - ஒரு டேபிள் ஸ்பூன்
	தக்காளி - 2 (விழுதாக அரைத்துக் கொள்ளவும்)
 
									
			                     
							
							
			        							
								
																	
	கொத்தமல்லித்தழை - சிறிதளவு
	எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்.
 
									
			                     
							
							
			        							
								
																	
									
										
								
																	
	செய்முறை:  
	 
	காலிஃப்ளவரை நன்கு சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பூண்டு இரண்டையும் சேர்த்து ஒன்றிரண்டாக மிக்ஸியில் அரைக்கவும்.
 
									
			                     
							
							
			        							
								
																	
	 
	முந்திரிப்பருப்பு, காய்ந்த மிளகாய், உப்பு, லவங்கம், பட்டை, சீரகம், தனியா, தேங்காய் துருவல், மஞ்சள்தூள், கசகசா ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்துக்  கொள்ளவும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும்.
 
									
			                     
							
							
			        							
								
																	
	 
	காலிஃப்ளவர் துண்டுகளுடன், வெங்காயம் - பூண்டு விழுது, அரைத்த மசாலா விழுது, தக்காளி விழுது சேர்த்து நன்கு பிசிறிக் கொள்ளவும். அடி கனமான  வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிசிறிய காலிஃப்ளவர் துண்டுகளை சேர்க்கவும் பிறகு அதில் ஒரு கப் நீர் விட்டு, சுமார் 20 நிமிடம் மூடி வைக்கவும். 
 
									
			                     
							
							
			        							
								
																	காலிஃப்ளவர் வெந்து கிரேவி ஆனதும் இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும். சுவை மிகுந்த காலிஃப்ளவர் வெந்து கிரேவி தயார்.