தேவையான பொருட்கள்:
	 
	கத்தரிக்காய் - 5
 
 			
 
 			
					
			        							
								
																	
	வெங்காயம் - 2
	இஞ்சி பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
	மஞ்சள் தூள் - ஒரு ஸ்பூன்
	மிளகாய்தூள் - ஒரு ஸ்பூன்
	சிக்கன் மசாலா - தேவையான அளவு
	தனியா தூள் - 2 ஸ்பூன்
	தயிர் - 2 ஸ்பூன்
	தேங்காய் பால் - ஒரு கப்
	கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
	பச்சை மிளகாய், புதினா - தேவையான அளவு
	உப்பு - தேவையான அளவு
	நல்லெண்ணெய் - தேவையான அளவு.
	செய்யும் முறை:
	 
	ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு வெங்காயம் நிறம் மாறியதும் இஞ்சி பூண்டு விழுது, தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
	 
	இத்துடன் நாம் வைத்துள்ள தூள் வகைகளை சேர்த்து வதக்கவும். தயிர் தேங்காய் பால், மற்றும் உப்பு, ஆகியவற்றை சேர்த்து பின்பு 20 நிமிடங்கள் வரை வேக  வைக்கவும்.
	 
	20 நிமிடங்கள் பிறகு கத்திரிக்காய் சேர்த்து வதக்கிவிடவும். பின் குழம்பு பதத்தில் வரும்போது நன்றாக சுருங்க வைக்க வேண்டும். இப்போது ருசியான கத்தரிக்காய்  கிரேவி தயார்.