Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டிலேயே செய்திடலாம் சுவையான வாழைக்காய் சிப்ஸ் செய்ய...!

Webdunia
தேவையான பொருள்கள்:
 
வாழைக்காய் - 2
மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி 
உப்பு - தேவையான அளவு 
பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு
 
         
செய்முறை:
 
முதலில் வாழைக்காய்களை தோலுரித்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து சிப்ஸ் போடும் பலகையை கடாயின் மேல் வைத்து எண்ணெய் கொள்ளும் அளவுக்கு வாழைக்காயை வட்ட வட்டமாக சீவி கொள்ளவும்.
                               
சீவி முடித்தவுடன் தீயை கூட்டி மிதமான சூட்டில் வைத்து பொரித்து எடுக்கவும். மீதமுள்ள வாழைக்காயையும் இதே முறையில் பொரித்து எடுத்து டிஸ்யு பேப்பரில் வைக்கவும்.

எண்ணெய் உறிஞ்சியவுடன் சிப்ஸை எடுத்து ஒரு தட்டில் பரப்பி மிளகாய்தூள், பெருங்காயத்தூள், உப்பு எல்லாவற்றையும் கலந்து சிப்ஸின் மேல்  தூவி நன்றாக கலக்கவும். இதனை காற்றுப் புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். சுவையான வாழைக்காய் சிப்ஸ் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தைகளின் காது, மூக்கு, தொண்டை பிரச்சனைகள்: கவனிக்க வேண்டியவை என்ன?

கொத்தவரங்காயின் ஆரோக்கிய நன்மைகள்: தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் முக்கியத்துவம்

உடல் சூட்டைக் குறைக்கும் எளிய வழிகள்..!

சீரக நீரா? தனியா நீரா? உடல் எடையைக் குறைக்கவும் ஆரோக்கியத்தைப் பேணவும் எது சிறந்தது?

திங்கட்கிழமைகளில் மாரடைப்பு அபாயம் அதிகம்: மருத்துவர்கள் எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments