தேவையான பொருட்கள்:
	 
	பொட்டுக்கடலை - 100 கிராம்
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	பச்சை மிளகாய் - 2
	புளி - பாக்கு அளவு
 
									
										
			        							
								
																	
	பூண்டுப் பல் - 3
	தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
 
									
											
									
			        							
								
																	
	கறிவேப்பிலை - சிறிது
	உப்பு - தேவையான அளவு 
 
									
					
			        							
								
																	
									
										
								
																	
									
			                     
							
							
			        							
								
																	
	 
	பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், புளி, பூண்டுப் பல், தேங்காய் துருவல், கறிவேப்பிலை, உப்பு எல்லாவற்றையும் மிக்ஸ்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றவும்.
 
									
			                     
							
							
			        							
								
																	
	 
	பின்னர் லேசாக தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைத்து எடுத்து வைக்கவும். சுவை மிகுந்த பொட்டுக்கடலை துவையல் தயார்.
 
									
			                     
							
							
			        							
								
																	
	 
	குறிப்பு: இதில் தண்ணீர்  அதிகமாக சேர்க்கக் கூடாது. எனவே தண்ணீரை தெளித்து அரைக்கவும். கெட்டியாக அரைத்து எடுக்கவும்.