Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுவையான தக்காளி தோசை சாப்பிட ஆசையா? கொஞ்சம் முயற்சி செய்து பார்ப்போமா?

சுவையான தக்காளி தோசை சாப்பிட ஆசையா? கொஞ்சம் முயற்சி செய்து பார்ப்போமா?
, வியாழன், 10 செப்டம்பர் 2015 (11:38 IST)
அவசரமான உலகில் அசத்தலாக சாப்பிடுவது கொஞ்சம் கஷ்டம் தான் ஆனால் சுவையாக எளிமையாக சமைத்து சாப்பிடுவது ரொம்ப ஈஸி, கடுமையன வெங்காய விலையின் மத்தியில் மலிவாக கிடைக்கும் தக்காளியின் மூலம் சுவையான தக்காளி தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்டகள்:
1.பச்சரிசி- 1 கப்
2.தக்காளி- 2
3.துவரம் பருப்பு- 1 மேஜைக்கரண்டி
4.வத்தல் மிளகாய்- 3
5.கறிவேப்பிலை- 1 கொத்து
6.பெருங்காயத் தூள்- 1/4 தேக்கரண்டி
7.உப்பு- தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசி, வத்தல் மிளகாய், துவரம் பருப்பு, தக்காளி இவற்றை ஒரு பாத்திரத்தில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்தவற்றுடன் பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் தோசை மாவு பத்தத்தில் அரைக்கவும். அரைத்த மாவுடன் கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் தோசை கல்லை வைத்து எண்ணெய் தடவி ஒரு கரண்டி மாவை தோசை கல்லில் பரவலாக ஊற்றவும். மேலே எண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு எடுக்கவும். இப்போது சுவையான தக்காளி தோசை தயார்...

குறிப்பு: மாவை கல்லில் ஊற்றி தேய்க்க கூடாது, பரவலாக ஊற்றவும்.

Share this Story:

Follow Webdunia tamil