Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தளதள எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு! சூப்பர் ரெசிபி இதோ!

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2023 (09:27 IST)
தமிழ்நாட்டு குழம்பு வகைகளில் மிகவும் பிரபலமானது எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு. எளிமையான வழியில் ருசியான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்வது எப்படி என பார்க்கலாம்.


  • தேவையானவை: கத்தரிக்காய், தனியா தூள், மிளகாய் தூள், கறிவேப்பிலை, உப்பு தேவையான அளவு.
  • 1 டீஸ்பூன் சீரகம், தேங்காய் துறுவல், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • அரைத்த மசாலாவுடன் மிளகாய் தூள், தனியா தூள், உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
  • கத்தரிக்காயை தனித்தனி துண்டுகளாக வெட்டாமல் காம்பை பிடித்து அடிப்பாகத்தில் இருந்து குறுக்கு நெடுக்காக வெட்ட வேண்டும்.
  • பின்னர் கத்தரிக்காய்க்குள் தயார் செய்த மசாலா கலவையை திணிக்க வேண்டும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை போட்டு தாளித்து, பின்னர் மசாலா தடவிய கத்தரிக்காய்களை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
  • அதன்பின்னர் மீதமுள்ள மசாலா கலவையை கடாயில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கிரேவியாக கொதிக்க வைக்க வேண்டும்.
  • நல்ல கொதி வந்ததும் கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கினால் தளதளக்கும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முடி உதிர்வுப் பிரச்சனைகளுக்குச் சித்த மருத்துவத் தீர்வுகள்: அலோபேசியா, பூஞ்சைத் தொற்று, பொடுகு நீங்க எளிய வழிகள்!

நிம்மதியான தூக்கம் வேண்டுமா? இரவு உணவில் சேர்க்க வேண்டிய 5 முக்கிய உணவுகள்!

ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கு உதவும் அத்தியாவசிய உணவுகள்: ஒரு விரிவான வழிகாட்டி!

மருக்களை போக்க சில எளிய வீட்டு வைத்தியங்கள்: நிரந்தர தீர்வுக்கான வழி!

அடிக்கடி வரும் ஏப்பம்: காரணங்களும், தடுக்கும் வழிகளும்!

அடுத்த கட்டுரையில்
Show comments