தேவையான பொருட்கள்:
புளி - நெல்லிக்காய் அளவு
அப்பளம் - 5
கடுகு - ஒரு டீஸ்பூன்
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - ஒன்று
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
எண்ணெய் - 4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1
செய்முறை :
* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். அப்பளத்தை துண்டுகளாக வெட்டி வைக்கவும். புளியை நன்றாக கரைத்துகொள்ளவும்.
* ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயத்தை போட்டு நன்றாக வதங்கிய பின்னர் தக்காளியை போட்டு வதக்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கிய பின்னர் சாம்பார் பொடி, மிளகாய் தூள் சேர்த்து வதக்கிய பின் புளி கரைசலை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். நன்றாக கொதிக்கும் போது உப்பு சேர்க்கவும்.
* மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு தாளித்த பின் வெட்டி வைத்துள்ள அப்பளத்தை போட்டு சிறிது வதக்கி கொதித்து கொண்டிருக்கும் குழம்பில் சேர்த்து 5 நிமிடம் அடுப்பை மிதமான தீயில் வைத்து இறக்கவும். சுவையான அப்பளக்குழம்பு தயார்.