Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான நெய் சாதம் செய்வது எப்படி...?

Webdunia
தேவையான பொருட்கள்: 
 
நெய் - 4 டேபிள் ஸ்பூன் 
முந்திரி பருப்பு - 15 
கிஸ்மிஸ் - 3 டேபிள் ஸ்பூன் 
வெங்காயம் - 2 
பிரியாணி இல்லை - 2 
ஏலக்காய் - 3 
நட்சத்திர சோம்பு - 1 
கிராம்பு - 4 
பட்டை - 1 
இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் 
பச்சை மிளகாய் - 3 
பஸ்மதி அரிசி - 2 கப் 
உப்பு - தேவையான அளவு 

செய்முறை: 
 
முதலில், ஒரு வாணலியில் நெய் ஊற்றி முந்திரி பருப்பு போட்டு வறுத்து தனியாக எடுக்கவும். அதே வாணலியில் ஒரு பிடி வெங்காயம் போது வறுத்து தனியாக  எடுக்கவும். பின்னர், பிரியாணி செய்யும் வாணலியில் நெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். 
 
பிறகு, வெங்காயம் சேர்த்து வதக்கி பொன்னிறமானதும் கழுவி வைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து இரண்டு நிமிடம் வேகவைக்கவும்.

பின்னர், 2 டம்ளர் அரிசிக்கு  மூன்றரை கப் தண்ணீருடன் உப்பு சேர்த்து கிளறி வேகவைக்கவும். சாதம் நன்றாக வெந்ததும் கொஞ்சம் நெய் ஊற்றி, வறுத்துவைத்த முந்திரி, வெங்காயம் சேர்த்து  கிளறி இறக்கவும். சுவையான நெய் சாதம் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களுக்கு அதிக இதய நோய் பாதிப்பு! விழிப்புணர்வு தேவை..!

எடை குறைப்பிற்கு சைவ உணவே சிறந்தது: புதிய ஆய்வு முடிவு!

கருவளையங்கள் தொல்லையா? இயற்கையான வழியில் முக அழகைப் பாதுகாக்கும் எளிய குறிப்புகள்!

இரவுப் பணி செய்யும் பெண்களுக்கு ஏற்படும் உடல்நல பாதிப்புகள்!

பேரீச்சம்பழம்: அளவோடு சாப்பிடுங்கள், ஆபத்துகளைத் தவிருங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments