Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான தேங்காய்ப்பால் முறுக்கு செய்வது எப்படி...?

Webdunia
தேவையான பொருட்கள்
 
அரிசி மாவு - 4 கோப்பை
வறுத்த உளுத்தம் பருப்பு மாவு - 1 கோப்பை
வெண்ணெய் - 1 மேஜைக் கரண்டி
தேங்காய் - 1
சீரகம் - சிறிதளவு
மிளகு - சிறிதளவு
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
 
மிளகு சீரகம் ஆகியவற்றை கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும். இதனுடன் சலித்த அரிசி மாவு, வறுத்து அரைத்த உளுத்தம் பருப்பு மாவு, உப்பு ஆகியவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் வெண்ணெயைச் சேர்த்து மாவை நன்கு பிசையவும். தேங்காயைத் துருவி சிறிது  தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி கெட்டியான தேங்காய்பால் எடுக்கவும்.
 
பிசைந்து வைத்த மாவை 4 அல்லது 5 பகுதியாக பிரித்துக் கொள்ளவும். ஒரு பகுதி மாவை மட்டும் தனியே எடுத்து சிறிது தேங்காய்ப் பால்  சேர்த்து பதமாகப் பிசைந்து கொள்ளவும்.
 
முறுக்கு நாழியில் மாவு ஒட்டாமல் வருவதற்காக எண்ணெய் தடவிக் கொள்ளவும். உங்களுக்கு பிடித்தவாறு 3 அல்லது 5 கண் அச்சை பயன்படுத்தவும். ஈரமான துணியின் மேல் சிறிய முறுக்காக பிழிந்து அதை எண்ணெயில் எடுத்து போடவும். அல்லது கரண்டியை  திருப்பி அதன்மீது சின்ன வட்டமாக பிழிந்து, பின்னர் அதை அப்படியே திருப்பி எண்ணெயில் விழுமாறும் செய்யலாம்.
 
இரண்டு பக்கமும் திருப்பி விட்டு முறுக்கை பொன் நிறமாகப் பொரிக்கவும். முறுக்கில் உள்ள அதிகப்படியான எண்ணெயை வடிகட்டி மூலம் வடித்து, அகன்ற பாத்திரத்திலோ அல்லது தட்டிலோ போட்டு ஆறவைத்து, பின்னர் காற்று புகாத சுத்தமான பாத்திரத்தில் போட்டு வைத்துப் பயன்படுத்தவும். முதலில் பிசைந்த மாவு தீர்ந்ததும், அடுத்த பகுதி மாவை எடுத்து முன்னர் செய்தது போல் பிசைந்து முறுக்கு சுட்டெடுக்கவும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?

பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments