தேவையான பொருட்கள்:
பிரட் துண்டுகள் - தேவையான அளவு
அரிசி பொரி - 100 கிராம்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
கேரட் - 1 (துருவியது)
புதினா சட்னி - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு
மிக்ஸர்/ஓமப்பொடி - தேவையான அளவு
புதினா சட்னி செய்ய:
புதினா - 1 கட்டு
கொத்தமல்லி - 1 கட்டு
செய்முறை:
முதலில் புதினா சட்னி செய்து கொள்ளவேண்டும். அதற்கு மிக்ஸியில் புதினா, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாயை போட்டு, அத்துடன் சிறிது உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் வெங்காயம், தக்காளி, கேரட் மற்றும் பொரி சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் புதினா சட்னி, எலுமிச்சை சாறு, கொத்தமல்லி, ஓமப்பொடி மற்றும் உப்பு சேர்த்து, கரண்டி கொண்டு நன்கு கிளறி விட வேண்டும்.
பின்பு பிரட் துண்டை எடுத்து, அதன் மேல் புதினா சட்னியை தடவி, அதன் மேல் கலந்து வைத்துள்ள பேல் பூரியை சிறிது வைத்து, அதற்கு மேல் மற்றொரு பிரட் துண்டை வைக்க வேண்டும். இதேப் போல் அனைத்து பிரட் துண்டுகளையும் செய்து பரிமாறினால், பேல் பூரி சாண்ட்விச் தயார்.