தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 1
நெல்லிக்காய் 3
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - 4 கப்
சோள மாவு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். நெல்லிக்காயை வேகவைத்து கொள்ளவும். வேகவைத்த நெல்லிக்காயில் உள்ள தண்ணீரை தனியாக வைக்கவும். நெல்லிக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் வதக்கவும். அடுத்து அதில் சோள மாவை சேர்த்து வறுக்கவும்.
அடுத்து அதில் நெல்லிக்காய், நெல்லிக்காய் வேகவைத்த தண்ணீரைச் சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும். கடைசியாக உப்பு, மிளகுத்தூள் சேர்த்து இறக்கி பரிமாறவும்.