Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவ குணங்கள் நிறைந்த இஞ்சி சட்னி செய்ய...!!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
இஞ்சி - 1/2 கப் நறுக்கியது
காய்ந்த மிளகாய் - 5
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவையான அளவு
புளி - ஒரு கோலி அளவு
வெல்லம் - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவைக்கு ஏற்ப
கடுகு - சிறிதளவு

செய்முறை:
 
இஞ்சியைக் கழுவி தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். புளியை ஒரு பாத்திரத்தில் ஊறவைக்க வேண்டும். ஒரு கடாயில்  நல்லெண்ணெய்யை ஊற்றி சூடானதும் நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும். பின்னர் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.
 
அதே கடாயில் கடலை பருப்பு காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். ஊறவைத்த புளியை சிறிதளவு நீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ள  வேண்டும். பின்னர் வதக்கிய அனைத்து பொருட்களையும் சேர்த்து அதனுடன் சிறிதளவு வெல்லம் சேர்த்து அதனுடன் புளிக் கரைசலையும் சேர்த்து மிக்ஸியில்  நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.
 
பிறகு சட்னியை தாளிக்க, எண்ணெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்ட வேண்டும். சுவையான இஞ்சி சட்னி தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களை அச்சுறுத்தும் எலும்புத் தேய்மானம்: தடுப்பது எப்படி?

மாரடைப்பு வருவதற்கு முன் வரும் அறிகுறிகள் என்ன?

மூல நோய் – காரணங்கள் மற்றும் இயற்கை நிவாரணங்கள்

ஜீன்ஸ் அணியும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

உள்ளூரில் சீண்டப்படாத நுங்கு.. மதிப்பு தெரிந்து வாங்க போட்டிப் போடும் வெளிநாட்டினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments