தேவையான பொருட்கள்:
கோவைக்காய் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 3
புளி - நெல்லிக்காய் அளவு
சின்ன வெங்காயம் - 10
பெருங்காயதூள் - கால் சிட்டிகை
நல்லெண்ணெய் - 50 மில்லி
கடுகு, உப்பு, கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு
செய்முறை:
கோவைக்காயை பொடியாக நறுக்கி இட்லி சட்டியில் வைத்து ஆவியில் வேக வைத்து ஆற வைக்கவும். ஆறிய கோவையுடன் புளியை சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
சின்ன வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி எண்ணெயில் வதக்கி அதையும் மிக்சியில் போட்டு அரைத்து எடுக்கவும்.
கடாயில் கடுகு, பெருங்காயதூள், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் அரைத்த இரு கலவைகளையும் கொட்டி உப்பு, தண்ணீர் சேர்த்துக் கிளறி சட்னி பதம் வரும் வரை கொதிக்க வைத்து இறக்கவும். சுவையான கோவைக்காய் சட்னி சட்னி தயார்.