சுவை மிகுந்த பலாப்பழ பாயாசம் செய்ய...!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
பலாப்பழம் - 20
தேங்காய் பால் - 2 கப் 
வெல்லம் - 150 கிராம் 
ஏலக்காய் - 6 
முந்திரி - தேவையான அளவு 
பிஸ்தா - தேவையான அளவு
நெய் - தேவைக்கு
செய்முறை:
 
பலாப்பழத்தில் உள்ள கொட்டைகளை நீக்கி விட்டு. பலாப்பழத்தை மட்டும் பொடியாக நறுக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி  பலாப்பழத்தை வேகவைத்து ஆற வைக்கவும். ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
 
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லம் போட்டு நன்றாக கரைந்ததும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி முந்திரி, பிஸ்தாவை வறுத்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லப் பாகை ஊற்றி ஒரு நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் மசித்து வைத்த பலாப்பழ விழுதை போட்டு அதன்பின்  ஏலத்தூள், தேங்காய் பால் ஊற்றி, நன்கு கொதித்தவுடன் நெய்யில் வறுத்த முந்திரி, பிஸ்தா, பொடியாக நறுக்கிய பலாப்பழத்தை போட்டு  இறுதியில் ஒரு தேக்கரணடி நெய் சேர்த்து இறக்கவும். சுவையான பலாப்பழ பாயாசம் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீடித்த ஆரோக்கியத்துக்கு 8 முக்கிய பழக்கங்கள்: ஹார்வர்டு மருத்துவர் அறிவுரை

உடல் பருமனால் கருத்தரிப்பதில் சிக்கலா? தாழ்வு மனப்பான்மை மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை

புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகள் என்ன? தடுப்பு முறைகள் குறித்த விளக்கம்..!

தினம் ஒரு கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? பயனுள்ள தகவல்..!

நீரிழிவு அதிகரிப்புக்குக் காரணம் என்ன? வெள்ளை உணவுகள் பற்றி ஆயுர்வேத மருத்துவர் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments