இந்த குறிப்புகளை பயன்படுத்தி சமையலை ருசியானதாக மாற்ற சில டிப்ஸ்....!

Webdunia
அடைக்கு ஊறப்போடும்போது உளுந்து, பச்சைப்பயிறு, கொண்டைக்கடலை ஆகியவற்றைத் தோலுடன் ஊறப் போட்டு அரையுங்கள். அரைக்கும்போது நான்கு பெரிய தக்காளிகளையும் நறுக்கிப் போட்டு அரைக்க வேண்டும். பிறகு தயாரித்துச் சாப்பிட்டுப் பாருங்கள்.
வெங்காய அடை செய்யும்போது சின்ன வெங்காயத்தைப் பொடியாக அரிந்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கி, மாவில் கலந்து அடை  வார்த்தால் மணம் மூக்கைத் துளைக்கும்.
 
சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேகவைத்துக் தோலுரித்து அடை மாவில் சேர்த்துப் பிசைந்து அடை செய்தால் மிருதுவாகவும், ருசியாகவும்  இருக்கும்.
 
ஆப்பம் செயும்போது மாவின்மேல் பரவலாகத் தேங்காய்த் துருவல், கேரட் துருவல் தூவி மூடிவைத்து எடுத்தால் சுவையாகவும்  கலர்புல்லாகவும் இருக்கும்.
 
தோசை வார்க்கும்போது கடினமாக வந்தால், சாதம் வடித்த கஞ்சியைச் சிறிதளவு மாவில் கலந்து வார்த்துப் பாருங்கள். தோசை பூப்போல  மிருதுவாக இருக்கும்.
 
புழுங்கல் அரிசியுடன்  தக்காளிப் பழம் சேர்த்து அரைத்து தோசை வார்த்தால் டேஸ்ட்டாக இருக்கும்.
தோசை மாவு அதிகம் புளித்துவிட்டால், ஒரு பங்கு மாவுக்கு கால் பங்கு ரவையுடன் இரண்டு வெங்காயம் சிறிது மிளகு - சீரகம், ஒரு பச்சை  மிளகாய் இவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்றுச் சுற்றி மாவில் கலந்து தோசை வார்த்தால் மணமாகவும் ருசியாகவும்  இருக்கும்.
 
தோசை மாவில் சிறிது பெருங்காயப் பொடியைக் கலந்து சுட்டால் தோசை வாசனை கமகமக்கும்.
 
அடைக்கு அரைக்கும்போது அரிசி, பருப்பு பொன்றவற்றுடன் சிறிது புளியும் சேர்த்து அரைத்தால் அடை, மிகவும் ருசியாக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணத்தக்காளி கீரையின் மகத்துவங்கள்: வயிற்றுப் புண் முதல் கருப்பை ஆரோக்கியம் வரை தீர்வு தரும் இயற்கை மருந்து!

முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் மஞ்சள் கரு.. எது சிறந்தது?

தலைசீவும் சீப்பை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்..!

கண்ணில் இருந்து அடிக்கடி நீர் வந்தால் என்ன பிரச்சனை?

காதில் அழுக்கு அதிகமானால் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது?

அடுத்த கட்டுரையில்
Show comments