பாகற்காய் குழம்பு செய்ய....!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
பாகற்காய் - 5
வெங்காயம் - 2
தக்காளி - 2
காய்ந்த மிளகாய் - 4
தனியா - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
எள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 11/2 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 4 டீஸ்பூன்
வெல்லம் - 2 டேபிள் ஸ்பூன்
புளிச்சாறு - கால் கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
 
பாகற்காயை நீரில் நன்றாக கழுவி அதில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு சிறிய துண்டாக நறுக்கிக் கொண்டு உப்பு சேர்த்து கிளறி பதினைந்து நிமிடம் ஊற வைத்து பின் அதனை சிறிது நீர் சேர்த்து கழுவிக் கொண்டு நீரை முற்றிலும் வடித்து தனியாக வைத்து கொள்ள வேண்டும்.
 
பின்னர் ஒரு வாணலியை அடிப்பில் வைத்து காய்ந்ததும் காய்ந்த மிளகாய், தனியா, சீரகம் மர்றும் எள் சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து குளிர வைக்க வேண்டும். பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
 
பிறகு இஞ்சி, பூண்டு விழுது பேஸ்ட் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி, தக்காளி செர்த்து வதக்கி பிறகு, அரைத்து வைத்துள்ள பொடி, புளிச்சாறு, வெல்லம்  மற்றும் உப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போகும் வதக்கி கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கினால் சுவையான  பாகற்காய் குழம்பு தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குளிர்காலத்தில் எந்த உணவுகளை சாப்பிடவேண்டும்? எதை தவிர்க்க வேண்டும்?!..

குளிர்காலத்தில் தயிர் சாப்பிடலாமா?!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் தூக்கம் இல்லாமல தவிக்கிறீர்களா?!.. இதை ஃபாலோ பண்ணுங்க!...

மாலை 6 மணிக்கு மேல் என்னென்ன உணவுகளை சாப்பிட்டால் ஆபத்து?...

கோழி.. ஆடு.. எந்த இறைச்சி உடலுக்கு நல்லது?!.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments