Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எண்ணற்ற பலன்களை வாரி வழங்கும் இளநீர்...!

Webdunia
இயற்கை தந்துள்ள வரப்பிரசாதமான இளநீர், ஒரு முழுமையான சத்துள்ள நீராகும். இந்திய மருத்துவ முறையில் இளநீர் பெரும்பங்கு வகிக்கிறது. இளநீர் ஒரு சிறந்த டானிக்காக வயதானவர்களுக்கும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பயன்படுகிறது. இளநீர் இரத்தத்தைத் சுத்தப்படுத்தும். 
இரத்தத்தில் கலந்துள்ள தேவையறற அசுத்த நீர்களை நீக்கும். இரத்தச் சோகையை போக்குகிறது. இரத்தக் கொதிப்பைக் குறைக்கும் சக்தி இளநீருக்கு உண்டு.  இரத்த அழுத்த நோயாளிகளுக்கு இளநீர் சிறந்த மருந்தாகும்.
 
அம்மை நோயின் தாக்கம் கண்டவர்கள், இளநீர் அருந்தினால் நோயின் வீரியம் குறையும். நாவறட்சி, தொண்டைவலி நீங்கும். சிறிநீர் பெருக்கியாகவும், சிறுசீரகம்  சீராக இயங்கவும், இளநீர் உதவுகிறது. சிறுநீரக கல்லடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.
 
மூளைக்கு புத்துணர்வும், நரம்புகளுக்கு வலுவும் ஏற்படுத்துகிறது. மது பழக்கம் உள்ளவர்களின் கல்லீரல் அதிகம் பாதிப்படையும் அதனை சீர்படுத்தும் குணம்  இளநீருக்கு உண்டு.
 
இரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதால் இருதயம் சீராக செயல்படும். இதய வால்வுகளை பலப்படுத்தும் துனமும் இளநீர் அருந்தி வந்தால் இதயநோய் ஏதும்  அணுகாது.
 
பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் அடிவயிறு வலிக்கு இளநீர் சிறந்த மருந்தாகும். டைபாய்டு, மஞ்சள் காமாலை நோயின் தாக்குதல் கொண்டவர்கள் இளநீர் அருந்தினால் உடல் விரைவாகத் தேறும்.
 
இளநீரில் சுண்ணாம்புச்சத்து நிறைந்திருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் உதவிகிறது. தேன் கலந்து அருந்தினால் தாது விருத்தியாகி ஆண்மை  சக்தியை பெருக்கும்.
 
இளநீர் பருக மட்டுமல்ல, வெப்பம் அதிகமாகும்போது சருமத்தில் ஏற்படும் வியர்குரு போன்றவற்றின் மீது தடவவும் நல்ல மருந்தாகும். முகத்தின் சரும  பாதுகாப்பிற்கும் இளநீர் தடவிக் கொள்வது நல்லது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments