அம்மா: எதுக்கும்மா பிப்ரவரி 14ஆம் தேதி அல்வா 3 கிலோ வேணுங்கற?
மகள்: அன்னிக்கு காதலர் தினம்மா, நிறையபேருக்கு அல்வா கொடுக்க வேண்டியிருக்கு!
----------------
"நம்ம காதல் சீனா தயாரிப்பு மாதிரி!
"எப்படி சொல்ற?"
"சீனால பொருட்களுக்கெல்லாம் உத்திரவாதமே கிடையாது"
----------------
ரமேஷ் இன்னைக்கு எனக்குக் கம்பெனி கொடுக்க முடியுமா?
ஸாரி கீதா! இது என் முதலாளியோட கம்பெனி...! அவரைத்தான் கேட்கணும்!
----------------
"உன் காதலி முன்னெச்சரிக்கை பேர்வழியா?
வேற ஒருத்தர மணக்கற சூழ்நிலை ஏற்பட்டால், உன் காதலன்னு உன் புருஷன்ட்ட வந்து சொல்ல மாட்டேன்னு முன் கூட்டியே எழுதி வாங்கிக்கிட்டா."
----------------
உங்க ரெண்டாவது மனைவி உங்களுக்குத் தூரத்து உறவுன்னு சொன்னீங்களே எப்படி?”
என் மகன் காதலி எனக்குத் தூரத்து உறவுதானே.