Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஈசான்ய மூலை என்பது என்ன? எந்த அறை அமைப்பது நல்லது?

ஈசான்ய மூலை என்பது என்ன? எந்த அறை அமைப்பது நல்லது?
, வியாழன், 21 ஜூன் 2018 (14:15 IST)
நம்மை நாம் அறிந்து கொள்ளும் வழியே வாஸ்து. நம்முடைய குணா திசையங்கள், வருமானம் மற்றும் மக்கட் பேறு அனைத்தையும் தீர்மானிக்கும் வீட்டு அமைப்பே வாஸ்து. அதனை அறிந்து கொண்டால் நம்மை நாம் அறிந்து கொள்வது சுலபம்.

 
ஈசான்ய மூலை என்கிற வடகிழக்கு மூலையில் வரவேற்பறை, உணவருந்தும் அறை மற்றும் குழந்தைகளின் படிப்பறை அமைக்கலாம். தவிர்க்க முடியாத சில இடங்களில் படுக்கையறை அமைக்கலாம். ஆனால் அப்படி அமைப்பது இரண்டாம் பட்சமே. 
 
வாஸ்துவில் நான்கு மூலைகளில் கன்னி மூலை எனப்படும் தென்மேற்கு மூலை உயர்ந்து இருக்க வேண்டும். அதற்கு அடுத்தபடியாக வாயு மூலையும், அக்னி  மூலையும் சற்றே தாழ்திருக்க வேண்டும், இப்படி அமைக்கும் போது ஈசான்ய மூலை என்கிற வடகிழக்கு பகுதி இயற்கையாகவே மற்ற எல்லா மூலைகளையும்  விட பள்ளமாக ஆகிவிடுகிறது. மேலும், பஞ்ச பூதங்களில் வடக்கு திசை என்பது தண்ணீரைக் குறிக்கும். எனவே ஈசான்யம் பள்ளமானதால் தண்ணீர் இங்கே  இருக்கும் நிலை உண்டானது. இதுவே உண்மையான தாத்பர்யம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உங்கள் பணப்பற்றாக் குறையை போக்கும் வழிகள்...!