Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேற்கு பார்த்த மனைகளின் வாஸ்து விதிகள் என்ன...?

மேற்கு பார்த்த மனைகளின் வாஸ்து விதிகள் என்ன...?
வடக்கு மற்றும் கிழக்கு பார்த்த மனைகள் மட்டுமே வாஸ்து அமைப்பில் நல்ல மனைகள் மற்ற திசைகளை பார்த்த மனைகள் கொஞ்சம் பலன் குறைந்த மனைகள் என்று நினைக்கின்றனர்.

மேற்கு பார்த்த மனைகளில் இல்லங்கள் அமைக்கும்போது வாஸ்து விதிகளையும், பழந்தமிழர் மனைபடி சாஸ்திரமான ஆயாதி பொருத்த அமைப்பை உட்புகுத்தி கட்டும் போது அற்புதமான வாழ்க்கை வாழமுடியும். 
 
மேற்கு பார்த்த மனைகளை கட்டும்போது வருண பகவான் தனது அதிகாரத்தை பயன்படுத்துகிறார். எனவே அத்திசையின் கடவுளை அனுசரித்து வீட்டை அமைக்கும்  போது மழையை எப்படி வருணபகவான் வழங்குகிறாரோ அதுபோல அனைத்து போகங்களும் கிடைக்கும் வீடாக இருக்கும்.
 
வாஸ்து அமைப்பில் மேற்கு பார்த்த மனைகளை தேர்ந்தெடுக்கும்போது மனையில் இருந்து நீங்கள் சாலைக்கு இறங்கும்போது, மேற்கு புறம் இறங்கி வடக்கு மட்டுமே பயணாப்பட வேண்டும். அப்படி சாலைகள் இல்லையென்றால் அந்த மனையை தவிர்க்க வேண்டும்.
 
இந்த மனைகளை வீடு கட்ட உபயோகிக்கும் போது வடக்கு மற்றும் கிழக்கு அதிக இடங்கள் இருக்கும் அமைப்பினை ஏற்படுத்தி வீடு கட்ட வேண்டும். அப்படி கட்டகூடிய கட்டிடம் தென்கிழக்கும் வடமேற்கும் இடத்தின் தரை அமைப்பில் உடைபடாது கட்ட வேண்டும்.
 
மேற்கு பார்த்த மனைகளில் வாஸ்து சாஸ்திர விதிகளை பின்பற்றி வீடு கட்டும்போது நல்ல பலன்களை கிழக்கு பார்த்த மனைகளை விட அற்புதமான ஐஸ்வரியங்களை வழங்கும் மனையாக இருக்கும். இதற்கு காரணம் மேற்கு பாகத்தில் ஒரு பகுதியை சனிபகவான் ஆட்சி செய்கிறார்கள்.
 
மேற்கு பார்த்த இடங்களை வாஸ்து மற்றும் ஜோதிட அமைப்பின் படி சரியான முறையில் சாஸ்திரத்தில் உள்ள விதிகளை பின்பற்றி அமைக்கும் போது மேற்கு பார்த்த மனைகளே முதல்தரமான மனைகள் ஆகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரத சப்தமி அன்று எருக்கன் இலைகள் கொண்டு நீராடுவது எதற்கு தெரியுமா...?