வாஸ்து சாஸ்திரம் என்பது கட்டடங்கள் கட்டும் முறை பற்றிய ஒரு விஞ்ஞான கலையாகும். இதில் வெறும் கட்டிடங்கள் பற்றி மட்டுமல்லாமல், அவற்றில் பயன்படுத்தக்கூடிய பொருட்களை பற்றி கூறும் விதிகளும் இருக்கின்றன.
அந்த வகையில் வீட்டில் மாட்டப்படும் சுவர் கடிகாரங்கள் பற்றிய வாஸ்து சாஸ்திர விதிகளை இங்கு தெரிந்து பார்க்கலாம்.
சுவர் கடிகாரங்களை வீட்டில் மாற்றுவதற்கும் சில வாஸ்து விதிகள் இருக்கின்றன. அவற்றை பின்பற்றி கடிகாரங்களை வீட்டில் மாட்டி வைப்பதால் நமது வீட்டில் நேர்மறையான சக்திகள் நிலைத்திருக்கும்.
சுவர் கடிகாரங்களை வீட்டில் இருக்கும் அறைகளின் கதவுகளுக்கு மேல் மாட்டி வைக்க கூடாது. வீட்டின் மேற்கு, வடக்கு, கிழக்கு திசைகளில் சுவர் கடிகாரங்களை மாட்டலாம். எக்காரணம் கொண்டும் தெற்கு திசையில் இருக்கும் அறைகளில் சுவர் கடிகாரங்களை மாட்ட கூடாது.
தெற்கு எம தர்மனின் திசை என்பதால், இத்திசையில் கடிகாரத்தை மாட்டுவது, நம்முடைய ஆயுட்காலத்தை எம தர்மன் குறைக்க ஏதுவாகும். எனவே இத்திசையில் கடிகாரங்கள் மாட்டுவதை தவிர்க்க வேண்டும். சுவர்கடிகாரங்கள் வெள்ளை, மஞ்சள் மற்றும் இளம் பச்சை நிறங்களில் இருக்குமானால் நேர்மறையான சக்திகளை வீட்டிற்குள் ஈர்க்க செய்யும்.