Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாஸ்து முறைப்படி வீட்டில் வளர்க்க ஏற்ற மரம், செடி கொடிகள் எவை தெரியுமா...?

வாஸ்து முறைப்படி வீட்டில் வளர்க்க ஏற்ற மரம், செடி கொடிகள் எவை தெரியுமா...?
மரம், செடி, கொடிகள் வைப்பதற்கான வாஸ்து முறைகள் உள்ளன. அவற்றை குறித்து பார்க்கலாம்.
மனிதனுக்கும் விலங்குகளுக்கும் மட்டுமே உயிர் உண்டு என்று நம்மில் பலபேர் நினைக்கின்றோம்.ஆனால் செடி,கொடிகள் சார்ந்த  தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை அறிவியல் ஆராய்ச்சி மூலமாக நிருபிக்கப்பட்டுள்ளது.
 
அப்படிப்பட்ட செடிகளையும் மரங்களையும் ஆராய்ந்து நமது முன்னோர்கள் வாஸ்து சாஸ்திர வழியாக வழங்கியுள்ளனர். வீட்டில் வளர்க்க  கூடிய மரங்கள் வகைகளைப்பற்றி பார்ப்போம்.

வேப்ப மரம், தென்னைமரம், மாமரம், பலாமரம், பாக்குமரம், கொன்றைமரம், நார்த்தை மரம், மாதுளை மரம், துளசிச்செடிகள் மற்றும் கொடிவகைகளில் மல்லிகை மற்றும் முல்லை, மணிபிளான்ட் கொடிவகைகளை தாரளமாக  வளர்க்கலாம்.
 
பிரம்மதண்டு மற்றும் எருக்கம் செடி அது எந்தவகையாக இருந்தாலும் வேண்டாம். சிலர் செயற்கை கற்றாழை வளர்பார்கள். அதுவும் வாஸ்து  ரீதியாக தவறு ஆகும். மரவகைகளில் முக்கியமாக வளர்க்க கூடாது என்று சொன்னால் அகத்தி மரம், முருங்கை மரம், பனைமரம்,  பாலமரங்கள், மகிழமரம், புளியமரம், அரசமரம், ஆலமரம், செண்பகமரம் போன்றவை ஆகும்.

இதேபோல் கொடிவகைகளில் பேய்பீர்கன், அவரைசெடிகளும், பாகற்செடிகளும் எக்காரணம் கொண்டும் வீட்டில் வளர்க்க கூடாது.
 
முள்உள்ள செடிகளையும், மரங்களையும் வீட்டில் வளர்க்க கூடாது என்றாலும், ஓரிரு செடிகளுக்கும் மரத்திற்கும் சாஸ்திர விதிவிலக்கு  அளிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் முள் உள்ள வெள்ளைவேலான் மரம் மற்றும் எலுமிச்சை செடி மற்றும் செயற்கை இல்லாத பன்னீர்  புஷ்பம் சார்ந்த செடிகளை வளர்க்கலாம். 
 
வீட்டில் மரம், செடி, கொடிகளை அமைக்க ஏற்ற திசைகள்: 
 
ஒரு வீட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் மரம், செடி, கொடிகள் அமைக்க வேண்டும்.  
 
ஒரு வீட்டின் தென்மேற்கு பகுதியில் உறுதியான உயர்ந்த மரங்களை வளர்ப்பது சிறப்பானது 
 
ஒரு வீட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் மரம், செடி, கொடிகள் அமைக்கக்கூடாது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (17-01-2019)!