Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீட்டிற்கான சில முக்கியமான வாஸ்து குறிப்புகளை பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

vastu
, வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (17:21 IST)
வாஸ்து பகவானை வழிபட தடைபட்டிருந்த வீடு மனை கட்டிடப்பணிகள் சிறப்படையும். வீட்டில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்க நாம் சில விசயங்களை செய்தால் தோஷங்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும்.


வீட்டுமனை சதுரமாகவோ அல்லது செவ்வக வடிவிலோ அமைய வேண்டும். வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு பகுதிகளில் பால்கனி அமையலாம். மழைநீர் ஈசானிய மூலை வலியாக வெளியேற வேண்டும். ஈசானிய மூலை நீண்டு இருப்பது மிகவும் நல்லது. வீட்டுக்கு தெற்கு, தென்மேற்கு, மேற்கு திசையில் மலை, குன்று இருப்பது நல்லது.

வீட்டுக்கு வடக்கு, வடகிழக்கு, கிழக்கு திசையில் ஓடை, கால்வாய், ஏரி, ஆறு இருப்பது நல்லது. மனையில் வீடு கட்டும் போது வடக்கு, வடகிழக்கு, கிழக்கு பகுதியில் கிணறு அல்லது பம்ப் அமைத்து நீர் எடுத்து பயன்படுத்த வேண்டும். வீட்டின் மத்தியிலும் மற்ற திசைகளில் அமையும் கிணறு, பம்ப் தீய பலன்களைத் தரும்.

வீட்டின் தெற்கும், மேற்க்கும் குறைந்த இடமும், வடக்கு, கிழக்கில் அதிக இடமும் விட்டு கட்ட வேண்டும். வீடு கட்ட கடைக்கால் தோண்டும் போது முதலில் ஈசானியத்தில் ஆரம்பித்து கடைசியில் தென்மேற்கே தோண்டி முடிக்க வேண்டும். வீடு கட்டுமானப் பணியின் போது முதலில் தென்மேற்கில் ஆரம்பித்து ஈசானியத்தில் முடிக்க வேண்டும்.

தென்மேற்கு மூலை 90 டிகிரி சரியாக இருக்க வேண்டும். வீட்டின் தெற்கு, மேற்கு, தென்மேற்கு உயர்ந்தும் வடக்கு, கிழக்கு, வடகிழக்குப் பகுதி தாழ்ந்தும் இருக்க வேண்டும்.

பஞ்சபூத ஆற்றல் கிடைக்க ஈசானிய மூலை காலியாக இருக்க வேண்டும். மாலையில் விளக்கேற்ற சுபிட்சமுண்டாகும். வீட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அதிக கதவுகள், ஜன்னல்கள் அமைய வேண்டும். வீட்டிற்கு ஜன்னல், கதவுகள் இரட்டைப்படையில் இருப்பதே நல்லது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சஷ்டி விரதத்தின்போது சொல்லவேண்டிய முருகனுக்குரிய மந்திரங்கள் என்ன...?