Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாழடைந்த வீடுகளை பராமரிக்காமல் விட்டால்?

Advertiesment
பாழடைந்த வீடுகளை பராமரிக்காமல் விட்டால்?
, வெள்ளி, 10 நவம்பர் 2017 (18:41 IST)
போதுமான பணம் இல்லாத காரணத்தினால் நீண்ட காலமாக கட்டப்படாமல் பாழடைந்த நிலையில் விடப்பட்ட கட்டடங்களெல்லாம் அப்படியே இருந்ததென்றால் அதில் எதிர் சக்திகளெல்லாம் குடிகொண்டுவிடும் என்று சொல்கிறார்களே, அது உண்மையா?






பொதுவாக, "சிறுகக் கட்டிப் பெருக வாழ்" என்று ஒரு பழமொழி உண்டு. கட்டுவதிலேயே பரந்துபட்டு கட்டாமல் இருந்தால் நல்லது என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். பரந்து (பெரிதாக) கட்டினால் அதில் இரண்டு அறைகள் பூட்டி வைத்திருக்கும். அப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்று சொல்கிறார்கள். கட்டியதனைத்தும் பயன்பாட்டிற்கு வரவேண்டும்.

ஒரு வீடு என்று கட்டுகிறோம், அது அரை செண்ட்டாக இருந்தாலும் சரி, ஐந்து செண்ட்டாக இருந்தாலும் சரி அத்தனையையும் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்தாம இருக்கக் கூடாது. பயன்படுத்தாமல் இருக்கும் போது அதில் எதிர்மறை சக்திகள் குடிகொள்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. சாதாரணமாகவே விட்டுவிட்டாலே புழு, பூச்சியெல்லாம் வருகிறது அல்லவா, அது நமது கண்ணுக்குத் தெரிந்திருக்கிற மாசு. கண்ணுக்குத் தெரியாத மாசு காஸ்மிக் கதிர்கள் அடிப்படையில் வைத்துப் பார்க்கும்போது, நாம் பயன்படுத்தாம இருக்கிற இடத்தில் ஒரு நெகட்டிவ் ஃபார்மாகும். அதிலும் பாழடைந்த வீடுகள், இடங்களெல்லாம் வைத்துக் கொள்ளக்கூடாது. அது நமது சந்ததிகளை மிகவும் பாதிக்கும்.

இரண்டு மாதத்திற்கு முன்பு ஒரு தம்பதி வந்திருந்தார்கள். ஈரோட்டுக்காரர்கள். பாரம்பரியமாகவே பணக்காரர்கள். நான்கு தலைமுறையாகவே நல்ல வசதி வாய்ப்புகளுடன் இருக்கிறார்கள். இவர்களுக்கு திருமணம் முடிந்து 9 வருடங்கள் ஆகிறது. குழந்தை பாக்கியமே கிடையாது. மருத்துவர்களிடம் எல்லாம் இருவருமே பரிசோதித்துக் கொண்டார்கள். இருவருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.

பிறகு பிரஸ்னம் பார்க்கும் போது, பூர்வீக சொத்து ஒன்று முடங்கிக் கிடக்கிறது. அதை வந்து நீங்கள் சரியாக பராமரிக்காம விட்டிருக்கிறீர்கள் என்று சொன்னேன். அதற்கு அவர்கள் ஆமாம், யாருமே இல்லை, பூட்டிக் கிடக்கிறது. அங்கு போய் தங்கிவிட்டு வந்தாலும் உடம்பு முடியாமல் போய்விடுகிறது என்று சொன்னார்கள்.

சரி, அதை எதற்கு வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதை இடித்துவிட்டு புதிதாக கட்ட ஆரம்பியுங்கள் என்று சொன்னேன். அதற்கு அவர்கள், அதை இடிக்கக் கூட முடியாமல் போய்விட்டது என்றார்கள். பிறகு அவர்களுடைய நட்சத்திரம் வைத்து ஜாதகம் கணித்து தேதி குறித்துத்துக் கொடுத்து அந்த நாளில் வேலையைத் தொடங்கினால் சரியாகிவிடும் என்று சொன்னேன்.

இந்த மாதிரியான இடங்களை இடித்துவிட்டு ஒரு ஆறு மாதம் சூரியக் கதிர்கள், மழை எல்லாம் படும்படி விட்டுவிட வேண்டும். இப்படி விட்டுவிட்டால் அங்கிருக்கும் நெகட்டிவ் ஃபோர்ஸ் எல்லாம் விலகும். அந்த மண்ணுக்கும் பாஸிட்டிவ் வைப்ரேஷன் கிடைக்கும். அதன்பிறகு அவர்கள் கட்ட ஆரம்பிப்பது நல்லது.

ஆக மொத்தம் பராமரிக்கப்படாத வீடுகள், பாழடைந்த பங்களாக்கள் இவைகளெல்லாம் இருக்கக்கூடாது. அது இருந்தால் பாதிப்பு இருக்கும். குடும்பத்தில் நான்கு பிள்ளைகள் இருந்தால், யாராவது ஒரு பிள்ளையை அந்த நெகட்டிவ் பாதிக்கும். அதனால் அதைச் செய்துவிடுவது நல்லது.

ஆனால் பண வசதியே இல்லாதவர்கள் என்ன செய்வது? அதற்கு ஏதாவது பரிகாரம் இருக்கிறதா?

இல்லாதவர்கள், அந்த இடத்தை சுத்தப்படுத்தி, விளக்கேற்றி வைக்கலாம். அவர்களுக்குத் தெரிந்த ஸ்லோகங்கள், எந்த மதத்தவர்களானாலும் அவர்களுக்குள்ள வழிபாட்டு முறைகளை கடைபிடிப்பது நல்லது. பூட்டியே வைக்காமல் இருந்தாலும் நன்றாக இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உங்கள் கஷ்டங்கள் தீர இந்த வழிபாடு சிறந்தது...!!