நம் உடலுக்கு மூளை எவ்வளவு அவசியமான ஒன்றோ, அது போல் ஒரு கட்டடத்திற்கு தலைவாசல் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒரு கட்டடம் எந்த திசையை நோக்கி இருந்தாலும் அதன் தலை வாசலை உச்சத்தில் அமைப்பது அவசியம்.
தலைவாசல் இருக்க வேண்டிய இடங்கள்:
வடக்கு பார்த்த கட்டடத்திற்கு தலைவாசல் வடக்கு திசையில் கிழக்கு திசைக்கு ஒட்டியவாறு அமைக்க வேண்டும்.
கிழக்கு பார்த்த கட்டடத்திற்கு தலைவாசல் கிழக்கு திசையில் வடக்கு திசைக்கு ஒட்டியவாறு அமைக்க வேண்டும்.
தெற்கு பார்த்த கட்டிடத்திற்கு தலைவாசல் தெற்கு திசையில் கிழக்கு திசைக்கு ஒட்டியவாறு அமைக்க வேண்டும்.
மேற்கு பார்த்த கட்டடத்திற்கு தலைவாசல் மேற்கு திசையில் வடக்கு திசைக்கு ஒட்டியவாறு அமைக்க வேண்டும்.
ஒரு வீட்டிற்கோ அல்லது தொழில் நிறுவனத்திற்கோ அமைக்கப்படும் தலைவாசல் ஒன்று, இரண்டு, நான்கு, ஆறு, எட்டு... என்ற எண்ணிக்கையில் வருமாறு அமைக்க வேண்டும். மேலும் கட்டிடத்திற்குள் போடப்படும் அறைகளின் வாசல்களும் உச்சத்தில் தான் அமைக்கப்பட வேண்டும்.
வாஸ்து நிபுணர் - ஆண்டாள் பி.சொக்கலிங்கம்