Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாஸ்து சாஸ்திரத்தின்படி சமையலறை எந்த திசையில் இருக்க கூடாது...?

Webdunia
வீட்டில் சமையலறை வாஸ்து மூலைகள் ஆன அக்கினி பகவான் மூலையில் அதாவது தென்-கிழக்கு திசைகளில் தான் அமைக்க வேண்டும். சமையலறை அமைப்பதற்கு இதுவே மிகவும் பொருத்தமான பகுதியாகும். இந்த வாஸ்து சாஸ்திரம் படி சமையலறையை அமைப்பதினால்  வீட்டில் ஐஸ்வரியம் பொங்கும்.
சமையல் செய்யும் பொழுது, வீட்டுப் பெண்மணி அல்லது சமையல்காரர் கிழக்கு திசை நோக்கி இருக்க வேண்டும். அதே போல ’அடுப்பு’  அது கேஸ் அடுப்பாக இருந்தாலும் சரி, விறகு அடுப்பு அல்லது நிலக்கரி அடுப்பு அல்லது மின் அடுப்பாக இருந்தாலும், அது  அமைக்கப்பட்டிருக்கும் திசை முக்கியமானது என நம்பப்படுகிறது.
 
எக்காரணம் கொண்டு வாஸ்து மூலைகள் ஆன ஈசானிய மூலையில் அதாவது வடகிழக்கு மூலையில் சமையலறையை அமைக்கக் கூடாது. அவ்வாறு அமைத்தால் வீட்டில் இருக்கும் செல்வங்களை எரிப்பதற்கு சமம்.
 
ஒரு வீட்டின் சமையல் அறை என்பது வாஸ்து படி தென்கிழக்கு திசையில் இருந்தால் சிறப்பாக இருக்கும். அதுவே அக்கினி பகவானுக்கு உகந்த திசை ஆகும். தென்கிழக்கு திசையில் சமையல் அறையை தவிர வேறு அறைகள் இருப்பது நல்லதல்ல.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments