Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விநாயகரின் அருகில் ஒரு எலி வேண்டி நிற்பது எதனை உணர்த்துகிறது...?

விநாயகரின் அருகில் ஒரு எலி வேண்டி நிற்பது எதனை உணர்த்துகிறது...?
விநாகரின் உருகத்தின் உள் அர்த்தங்கள் மிக ஆழமான ஆன்மிக தத்துவங்களை உள்ளடக்கியது. விநாயகர் உருவப் படங்களில் ஒரு எலி  விநாயகரை வேண்டி நிற்பது போல் இருக்கும். இதன் முழுமையான அர்த்தம் என்னவென்பதை பார்ப்போம்.
உணவுப் பண்டங்களுக்கிடையே ஒரு மூஞ்சூறு உணவினைத் தொடாமல் விநாயரின் அனுமதி வேண்டி நின்றிருக்கும். மூஞ்சூறு (எலி). இது  ஆசைகளை உருவகப்படுத்துகிறது. 
 
எலிக்கு சிறிய வாய் மற்றும் கூரிய பற்கள் உண்டு. ஆனால் எலி மிகுந்த பேராசை கொண்டது. அதனுடைய ஆசை எவ்வளவு பெரியது  என்றால் எப்போதுமே தனது தேவைக்கு மேலேயே உணவினைச் சேர்த்து வைக்கும். பலமுறை எந்த இடத்தினில் சேர்த்தோம் என்ற  அறிவின்றி பல வளைகளிலும் உணவினைச் சேர்த்து வைக்கும். 
 
எலிகள் பேராசையின் மொத்த உருவம். இத்தகைய குணம் உள்ள எலி பரப்பி வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களின் மத்தியிலிருந்தும்,  அவற்றினைத் தொடாமல் விநாயகரின் அனுமதி வேண்டி அமர்ந்திருக்கிறது. இது உணர்த்துவது யாதெனில், பூரணத்துவம் பெற்ற மனிதன் தன் ஆசைகளின் மேல் முழுமையான் ஆளுமை உடையவனாக இருப்பான். உலகச் சபலங்கள் அவனை எதுவும் செய்ய முடியாது என்பதனை  உணர்த்தவே அவ்வாறு காண்பிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுவாசத்தின் அங்குலமும் அதன் பயன்களும் பற்றி தெரியுமா...?