வீட்டை சுத்தமாக பாதுகாக்கும் வேலையை இல்லத்தரசி மட்டுமே செய்ய வேண்டும் என்பதில்லை. குடும்பத்தில் உள்ள அனைவருமே வீட்டை சுத்தமாக வைத்திருக்க உதவி செய்ய வேண்டியது அவசியம்.
கழுவிய பீங்கான், கண்ணாடி பாத்திரங்களை சுத்தமாக துணி வைத்து துடைத்து பின்பு அதனை அடுக்கும் பொழுது ஒரு தட்டு அதன் மீது பேப்பர் அதன் மீது தட்டு என்று வைக்கவும்.
முகம் பார்க்கும் கண்ணாடியில் கொஞ்சம் முகத்துக்கு போடும் பவுடர் போட்டு செய்திதாள் வைத்து அழுத்தி துடைத்தால் பளபளக்கும்
குளிர் காலத்தில் கண்ணாடிகள் புகை படிந்தது போல் இருக்கும் இருக்கும் அதனை போக்க சோப்பு நீரை ஊற்றி மெல்லிய துணியினால் துடைத்தால் சுத்தமாக இருக்கும்
வெள்ளிப் பாத்திரங்களில் கருமை படராமல் தடுக்க, அவற்றை அடுக்கி வைக்கும்போது இடையிடையே கற்பூர வில்லைகளையும் போட்டு வைக்கலாம்.