வீட்டை தூய்மையாக வைத்திருப்பதுதான் வீட்டை சுத்தப்படுத்தும் முறைகளில் முதன்மையானது. ஏனெனில் வீட்டை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொண்டால் அதனை சுத்தப்படுத்துவதற்கென்று ஒரு வேலையே செய்ய வேண்டாம்.
அடுத்ததாக வீட்டை தூய்மையாக வைத்திருப்பதற்கு முக்கியமாக நாம் செய்ய வேண்டியது தேவையற்றப் பொருட்களை வீட்டில் அடைத்து வைக்காமல் தூக்கி எறிவதுதான்.
அழுக்கான பொருட்களை உடனடியாக துவைத்து வெயிலில் உலர்த்துவதும் நல்லது.
தேவையானப் பொருட்களை பாதுகாத்து வைப்பதும் சிறப்பாக செய்ய வேண்டும். அதனை பாதுகாக்கிறோம் என்று பாழாக்கிவிடக் கூடாது.
வீட்டிற்குத் தேவையானதை மட்டும் வாங்கி வர வேண்டும். தேவையற்றப் பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.