வீட்டில் பொதுவாக பலரும் செல்லப் பிராணிகளை வளர்ப்பது வழக்கம். செல்லப் பிராணி என்றால் அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். பொதுவாக நாய், பூனையைத்தான் வளர்ப்பார்கள்.
தற்போது மாறி வரும் பழக்க வழக்கங்களால் பலரும் புதவிதமாக செல்லப் பிராணிகளைத் தேர்வு செய்கின்றனர்.
பிராணிகள் என்றால் அதில் பறவைகளும், மீன்களும் அடக்கம். பச்சைக் கிளி, புறா, மைனா, காதல் பறவைகள் போன்றவற்றை வளர்ப்பதும் அழகாக இருக்கும்.
மீன் தொட்டிகளில் மீன்களை வளர்ப்பதும் ஒரு நல்ல விஷயம்தான்.
அதுபோல நாய், பூனை, முயல் போன்றவற்றையும் வளர்க்கலாம். எதுவாக இருந்தாலும், வீட்டில் உள்ள சூழ்நிலையும், இட அமைப்பும் அதற்கு ஏற்றதாக உள்ளதா என்பதை பார்த்துக் கொண்டு வளர்க்கத் துவங்க வேண்டும்.