வீட்டில் இருக்கும் கண்ணாடி பொருட்களை மிகவும் கவனத்துடன் பாதுகாக்க வேண்டும். உங்கள் வீட்டில் சிறு குழந்தைகள் இருப்பின் தற்காலிகமாக கண்ணாடி சாமான்களை எடுத்து வைத்து விடுவது நல்லது.
காபி, பழச்சாறு குடிக்கும் கண்ணாடி கப் மற்றும் கண்ணாடி தட்டுகளை சிறிது வினிகர் ஊற்றி கழுவினால் பாத்திரங்கள் பளபளக்கும்.
பீரோவில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியை விபூதியை ஈரமாக்கி அதைக் கொண்டு துடைத்துவிட்டு பிறகு ஈரமான துணியால் துடைத்தால் பளிச்சென்று இருக்கும்.
கண்ணாடி சாமான்களை தண்ணீரில் அலசும் பொழுது சிறிது சொட்டு நீளம் போட்டு கழுவி பின்பு சூடுநீரில் அலசினால் பளபளவென்று இருக்கும்.
எந்த சாமானையும் கழுவி எடுத்து வைப்பதாக இருந்தால், கழுவியதும் உலர்ந்த துணியைக் கொண்டு துடைத்து விட்டால் நன்றாக இருக்கும்.