பொதுவாக வீட்டிற்கு வரும் நபர்கள் பயன்படுத்தும் முதல் பொருள் நம் வீட்டில் உள்ள நாற்காலிகள்தான். வீட்டின் வரவேற்பறையை அலங்கரிப்பதிலும் நாற்காலிகளுக்குத்தான் முன்னுரிமை.
எனவே, நமது வீட்டிற்குத் தேவையான நாற்காலிகளை வாங்கும் போது பல விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பெரிய தாராளமான வீடு என்றால் மரத்தால் ஆன வேலைப்பாடுகள் மிகுந்த நாற்காலிகளை வாங்கிப் போடலாம். நமது வீட்டின் வரவேற்பறை மிகப் பெரியதாக இருப்பின் மர நாற்காலியுடன், மர மேஜையும் அலங்காரமாக வீற்றிருக்கலாம்.
சிறிய வரவேற்பறையாக இருப்பின், மடித்து வைக்கும் நாற்காலிகளை வாங்கிப் போடலாம். தேவையற்ற சமயத்தில் மடித்து வைக்க வசதியாக இருக்கும்.
சோபா போன்றவற்றை வாங்குவதாக இருப்பின் அதனை சரியாக பராமரிப்பதற்கான வசதி உள்ளதாக என்பதை சிந்தித்துக் கொள்ளுங்கள்.
சோபா வாங்குவதென்று முடிவெடுத்துவிட்டால், வீட்டின் சுவர் நிறத்திற்கு ஏற்ற நிறத்தில் வாங்குவதும் அவசியம்.