பொதுவாக வீட்டின் அழகே, சுவரின் நிறத்தில்தான் அடங்கியுள்ளது. மிக அழகான வீட்டையும், அதில் உள்ளநிறம் அசிங்கமாகக் காட்டக் கூடும்.
எனவே வீட்டைக் கட்டும் போதும், வெள்ளை அடிக்கும் போதும் அதன் நிறத்தில் அதிக முக்கியத்துவம் அளிப்பது அவசியமாகிறது.
பொதுவாக வீட்டிற்கு இளம் பச்சை, இளம் நீல நிறங்கள் ஏற்றவையாக உள்ளன. ஆனால் தற்போது பல்வேறு வண்ணங்கள் வந்திருப்பதால் அவரவர் விருப்பப்படி வண்ணங்களை தேர்வு செய்து அடித்துக் கொள்ளலாம்.
எனினும், மிகவும் அடர்த்தியான நிறமாகவோ, சிவப்பு, மஞ்சள் போன்று கண்ணைப் பறிக்கும் நிறங்களோ வீட்டிற்கு தேவையில்லை.
குழந்தைகளின் அறைகளை மிக அடர்த்தியான நிறங்களை அடிக்க வேண்டாம். பச்சை நிறத்தின் குடும்ப நிறங்களில் ஏதேனும் ஒன்றை அடிப்பதால் அவர்களது கண் பார்வைக்கு நல்லது.
படுக்கை அறைக்கு இளம் சிவப்பு, க்ரீம் நிறங்களை அடிப்பது மனதிற்கு உற்சாகத்தை அளிக்கும்.