வீடுகளில் கோடை வெப்பத்தை சமாளிக்க...
, செவ்வாய், 21 மே 2013 (15:18 IST)
வீட்டின் மேல்தளம் சரியாக அமைக்கப்பட்டு இருந்தால் வெப்பம் அதிகமாக வீட்டிற்குள் இறங்காது. இல்லையென்றால், வீட்டின் மேல்தளத்தில் சிறிய கீற்றுக் கொட்டகை போட்டுக் கொள்வதும் நன்மை அளிக்கும். குறிப்பிட்ட அறைக்கு மேல் பரவலாக செங்கற்களை வைத்து அதன் மீது கீற்றுகளைப் போட்டு வைத்தாலும் வெப்பம் அதிக அளவில் உள்ளே வராது.
வீட்டின் மேல் தளத்தின் மீது வெள்ளை நிற சுண்ணாம்பு அல்லது பெயின்ட் அடித்து விட்டாலும், வெப்பம் உள்ககிரகிக்கப்படுவது தவிர்க்கப்படும்.
வீட்டின் வாயிலில் நடந்து செல்லும் பகுதியில் வெப்பம் கொளுத்துகிறதா? பகல் நேரத்தில் வெறும் காலுடன் நடக்க முடியாத இடங்களில் வெள்ளை நிறப் பூச்சை அடித்து விடுங்கள். வெப்பம் தெரியாது.வெள்ளை நிறம் வெப்பத்தை உள் கிரகித்துக் கொள்ளாமல் பிரதிபலித்துவிடும். எனவே, எங்கெல்லாம் வெயில் படுகிறதோ அங்கு வெள்ளை நிறத்தை அடிக்கலாம்.
வீட்டில் இயற்கையான ஏசி வேண்டுமா? வாயில்களிலும், ஜன்னல்களிலும் ஈரமான பெட்ஷீட்களை தொங்க விடுங்கள். போதும். வெப்பம் உள்ளே வராது.