தற்போது வீட்டை அலங்காரம் செய்வதற்கு ஏராளமான விஷயங்கள் வந்துவிட்டன. வீட்டின் வாயிற் சுவரில் இருந்து உள்ளிருக்கும் கழிவறை வரை அலங்காரங்கள் செய்து கொள்ளலாம்.
வீட்டின் வாசற் சுவரிலேயே தொட்டி போன்ற அமைப்பை ஏற்படுத்தி அதனுள் செடிகளை வைத்து வளர்ப்பது தற்போது வழக்கமாகி வருகிறது. இது சுவருக்கு எந்த அளவிற்கு தீங்கை ஏற்படுத்தும் என்பது நீங்கள் அந்த தொட்டியில் வைக்கும் செடியைப் பொருத்தது.
வீட்டின் வாயிலில் அமைக்கும் மின் விளக்குகள் அதிக ஒளியைத் தராவிட்டாலும், அதிக மின்சாரத்தை எடுத்துக் கொள்ளாததாக இருப்பதாக பார்த்து வாங்குவது நல்லது.
வீட்டின் வாயிற்புரத்தின் தரைகளை நல்ல தரமான புற்களைக் கொண்டு நிரப்பலாம். இதனால் மண் அரிப்பு தடுக்கப்படும். பார்க்கவும் பசுமையாக இருக்கும்.
வண்ண வண்ண பூச்செடிகளைக் கொண்டு தோட்டத்தை அழகுபடுத்தலாம். அவை பூத்துக் குலுங்கும் போது நமது மனமும் பூத்துக் குலுங்கும்.