டைல்ஸ், மார்பிள் போட்ட தரைகளை தான் தினமும் சுத்தம் செய்யனும் என்று இல்லாமல் எந்த வகையான தரையாக இருந்தாலும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் துடைக்கவும்.
ஒரு பக்கெட் தண்ணீர் வைத்து ஒரு அறையை மட்டுமே துடைக்கவும்.
துடைக்கும் துணியோ அல்லது மாப்போ எதுவாக இருந்தாலும், வீட்டை சுத்தம் செய்வதற்கு முன்பு நன்கு கழுவி சுத்தமாக இருக்கும்படி செய்யுங்கள்.
ஒவ்வொரு அறையையும் 3 பக்கெட் தண்ணீர் வைத்து துடைக்கவும். முதல் தடவை துடைக்கும் பொழுது வெறும் தண்ணீர் ஊற்றி துடைக்கவும்.
அடுத்த பக்கெட்டில் சோப்பு, டெட்டால் போட்டு துடைக்கவும். 3வது பக்கெட் தண்ணீரில் சிறிது வாசனை தரும் லிக்விட்டை ஊற்றி துடைக்கவும், வீடு நன்றாக மணமாக இருக்கும்.
வீட்டைத் துடைத்ததும் மின் விசியைப் பயன்படுத்தி உடனடியாக உலர விட வேண்டியதும் அவசியம்.