கிரகப்பிரவேசம் செய்வது பற்றி மனையடி சாஸ்திரம் மிகச் சிறப்பாக கூறியுள்ளது. அதன்படி, சித்திரை, வைகாசி, கார்த்திகை, தை ஆகிய மாதங்கள் கிரகப் பிரவேசம் செய்ய ஏற்ற மாதங்களாகும்.
ஆனால் வீட்டின் உரிமையாளர் இந்த மாதங்களில் ஏதேனும் ஒன்றில் பிறந்திருந்தால் அந்த மாதத்தில் கிரகப் பிரவேசம் நடத்தக் கூடாது.
மேலும், சந்திராஷ்டம நாட்களிலும், கரி நாளிலும் சுப காரியங்கள் செய்யக் கூடாது. குடும்பத் தலைவிக்கு வீட்டு விலக்கான நாளில் கிரகப் பிரவேசம் செய்து நல்லதல்ல.
அரை குறையாக கட்டி முடிக்கப்பட்ட வீட்டிற்கு கிரக பிரவேசம் நடத்துவதை தவிர்ப்பது நல்லது.
அமிர்த யோகம் காலத்தில் கிரகப்பிரவேசம் செய்ய மிகவும் சிறப்பானதாகும்.