கடுமையான கோடை வெயில் தாக்குகிறதா, அதை நினைத்துக் கவலைப் படாமல் வெயிலைப் பயன்படுத்திக் கொள்ளும் வழியைப் பார்ப்போம்.
வீட்டில் பல வருடங்களாக நாம் பயன்படுத்தி வரும் கட்டில் மெத்தை, சோபா, தலையணைகள் போன்றவற்றை காலையிலேயே மாடியில் தூக்கி வந்து போட்டு விடுங்கள்.
அடிக்கும் வெயிலில் மெத்தையில் இருக்கும் கிருமிகள் செத்து ஒழியும். மெத்தையை கட்டையால் அடித்து விட்டால் தூசும் ஓரளவிற்கு வெளியேறிவிடும்.
வடாகம், வத்தல் போன்றவற்றைப் போடுவதற்கு இதுதான் சரியான சமயம். ஒருவராக இல்லாமல் இரண்டு பேராக சேர்ந்து வத்தல் போடுவது வேலையை எளிதாக்கும். வீட்டிற்கும் பயனளிக்கும்.
ஊறுகாய் போடுவதற்கு இந்த வெயில்தான் சரியான நேரம். மாங்காயும் மலிவாகக் கிடைக்கிறதே ஏன் விட வேண்டும் வாய்ப்பை.