Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மொறுமொறு முறு‌க்கு செ‌ய்ய...

மொறுமொறு முறு‌க்கு செ‌ய்ய...
, செவ்வாய், 3 மே 2011 (18:10 IST)
மைதாவை நீர் விட்டுப் பிசையாது அப்படியே ஒரு பாத்திரத்தில் கொட்டி நீராவியில் சிறிது நேரம் வேகவைத்து எடுத்து, சுவைக்கேற்ப உப்பும், நெய்யும் கூட்டிப் பிசைந்து முறுக்குப் பிழியலாம். மொறுமொறு‌வென இருக்கும்.

எலுமிச்சைச் சாறு சேர்க்கும் பதார்த்தங்களுக்கு பச்சை மிளகாயைச் சேர்த்தால்தான் ருசியாக இருக்கும். வற்றல் மிளகாய் ஏற்றதில்லை.

உணவுப் பொருள்களுக்கு மஞ்சள் பொடி நல்ல நிறம் கொடுப்பதுடன் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. அது ஒரு கிருமிநாசினி.

பாலைக் காய்ச்சாமல் எதற்கும் உபயோகிக்கக் கூடாது.

மசாலாப் பொருள்கள் மணமாகவும் ருசியாகவும் இருப்பதால், அன்றாடம் சமையலில் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது. மசாலாப் பொருள்கள் ஜீரண நீர் சுரப்பதைப் பாதிக்கக் கூடியவை.

எலுமிச்சை சாற்றைக் சூட்டுடன் இருக்கும் பதார்த்தத்தில் சேர்க்கக் கூடாது. அதனால் சாறு கசந்து போய்விடும். சூடு ஆறிய பிறகே சாறு சேர்க்க வேண்டும்.

எண்ணெய் வைத்துப் பட்சணங்கள் தயாரிக்கும்போது காய்ந்த எண்ணெயில் கோலியளவு புளியைப் போட்டு அது கருகிய பின் எடுத்து எறிந்து விடவும். எண்ணெய்க் காறலை இது போக்கும்.

எளிதில் வேகவேண்டும் என்பதற்காகப் பலர் சோடா உப்பைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் உணவுச் சத்துக்கள் அழிந்து விடும்.

சில காய்கள் கசப்பு ருசியுள்ளவை. அவற்றை நறுக்கி அரிசி களைந்த நீதில் சற்று நேரம் போட்டு வைத்தால் கசப்பு நீங்கிவிடும்.

சமையலறையில் வைத்திருக்கும் உப்பில் குளிர் காலத்தில் ஈரக்கசிவு ஏற்படும். அப்படி ஆகாமல் இருக்க, சிறிது அரிசியைக் கலந்து வைக்கவும்.

ஈக்களை விரட்ட சிறிதளவு வசம்பை அரைத்து அல்லது சமையலுக்கு உபயோகிக்கும் உப்பைத் தண்ணீரில் கரைத்து வீடு முழுவதும் தெளித்தால் அந்த இடத்தில் ஈக்கள் தலைகாட்டாது.

Share this Story:

Follow Webdunia tamil